கப்ஸோ தன்னார்வு அமைப்பின் அனுசரணையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட "திருமணத்திற்கு முந்திய ஆலோசனை மற்றும் வாழ்க்கைத் திறன்கள் பற்றிய திறன் விருத்தி பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கடந்த வாரம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.
எம்.ஏ.டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கப்ஸோ தன்னார்வு அமைப்பின் திட்ட பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்தாத் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இப்பயிற்சி நெறி சுமார் 16 தலைப்புகளில் 3 மாதகாலமாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment