இம்முறை வெளியான கா.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய தெ லெஜன்ட் கல்லூரி மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் பேருவளை தெ லெஜன்ட் கல்லூரியில் இடம்பெற்றது.
தெ லெஜன்ட் கல்லூரியில் கல்வி கற்று (2021/2022) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய கணிதம், விஞ்ஞானம் மற்றும் வர்த்தகப் பிரிவு மாணவர்களில் அதிகமானோர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளனர். இதில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த இபாதா இம்தியாஸ் எனும் மாணவி கணிதத் துறையில் தமிழ் மொழி மூலம் தோற்றி 3A (Merit Pass) (Z-Score 2.4180) சித்திகளோடு மாவட்ட ரீதியில் 10ஆம் இடத்தினைப் பெற்று தனது பெற்றோருக்கும் தெ லெஜன்ட் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தெ லெஜன்ட் கல்லூரியின் பணிப்பாளர் அஸ்ரி ஆப்தின் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில், பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய ஏனைய மாணவர்களும் அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது இக் கல்வி நிறுவனத்தின் நிருவாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment