நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த மக்களுக்காக அரிய இன கருங்கோழிக் குஞ்சுகள் இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் திங்கட்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இக்கோழிக்குஞ்சுகளானது, வாழ்வாதாரம் இழந்த நலிவுற்ற மக்களை இனம்கண்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று தக்வா ஜும்மா பள்ளிவாசல் நிருவாக சபையினரால் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று தக்வா ஜும்மா பள்ளிவாசல் நிருவாக சபையின் தலைவர் என்.டீ. மன்சூர் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் மேலும் இந்நிகழ்வில், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம். தஸ்லீம், முகாமையாளர் டீ.கே.ரஹ்மதுல்லாஹ், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் பிரியந்தி வேரகொட மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தக்வா ஜும்மா பள்ளிவாசல் நிருவாக சபையினரும் பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்களும் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment