"ஹிக்மா வெற்றிக் கிண்ணம் - 2022" மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் சம்பியனானது நிந்தவூர் ஹிக்மா விளையாட்டுக் கழகம்.



நூருல் ஹுதா உமர்-
நிந்தவூர் ஹிக்மா விளையாட்டுக்க கழகம் கடந்த மூன்று வாரங்களாக நடாத்திய "ஹிக்மா வெற்றிக் கிண்ணம் - 2022" மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதி போட்டி நேற்று (12) நிந்தவூர் வெளவாளோடை கடற்கரை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் நிந்தவூர் ஹிக்மா மற்றும் ஒலுவில் இலவன் ஸ்டார் ஆகிய அணிகள் போட்டியிட்டு நிந்தவூர் ஹிக்மா விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை தனதாக்கியதுடன் ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் ரன்னர் அப்பாக தெரிவானது.

ஹிக்மா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.எம். ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இறுதி நாள் நிகழ்விற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட கழகத்திற்கும் வீரர்களுக்கும் வெற்றிக் கிண்ணம் மற்றும் பரிசில்களையும் தவிசாளர் மற்றும் அதிதிகள் வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், நிந்தவூர் அனைத்து விளையாட்டுக் கழக சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ. நசீல், அம்பாரை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் அனஸ் அஹமட், கிராம சேவை உத்தியோகத்தர் நளீம், ஆதம் அலி பெளன்டேஷன் நிறைவேற்று பனிப்பாளர் ஆதம் அலி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது எலிசபத் மகா இராணியின் மறைவினையொட்டு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேசியக் கொடி அறைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :