ஓட்டமாவடியில் டெங்கு பரிசோதனை வீடு வீடாக இடம் பெறுகின்றது.



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள பகுதிகளில் டெங்கு தாக்கம் பரவாத வகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்கின்; வழிகாட்டலில் வேலைத் திட்டங்கள் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் தலைமையிலான சுகாதார பிரிசோதகர்கள், அலுவலக டெங்கு பிரிவு உத்தியோகத்தர்கள், ஓட்டமாவடி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் வீடு வீடாக சென்று டெங்கு பரவும் இடங்களை இன்று பரிசோதனை செய்தனர்.

இதன்போது டெங்கு பரவும் வகையில் பொருட்களை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதுடன் அப் பொருட்கள் ஓட்டமாவடி பிரதேச சபை உத்தியோகத்தர்களால் அகற்றப்பட்டது.

டெங்கு நோயின் தாக்கத்தை உணர்ந்து பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுவதுடன், வீடுகளில் நீர் தேங்கியிருக்கும் இடங்களை அகற்றி, டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுத்து, எமது சுற்றுப்புற சூழலை சுகாதார முறையில் பேணுமாறு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :