மின் கட்டணம் கூடுவதால்...(கவிதை)மின் கட்டணம் கூடுவதால்...
++++++++++
Mohamed Nizous


வியர்த்தாலும் மின் விசிறி போட வேண்டாம்
விடிய விடிய விளக்குப் போட்டு வைக்க வேண்டாம்
பயறு அரைக்க கிறைண்டரினை நாட வேண்டாம்
பசித்தாலும் ரைஸ் குக்கரில் ஆக்க வேண்டாம்
கயிறு வாளி நீர் இழுப்பீர் மோட்டார் வேண்டாம்
கடும் கூதல் வந்தாலும் ஹீட்டர் வேண்டாம்
தயிரு காக்க பிரிட்ஜ் தொடர்ந்து போட வேண்டாம்
மயிரு மேலே மெஷின் பிடித்து உலர்த்த வேண்டாம்


வானொலியை கரண்டில் போட்டு கேட்க வேண்டாம்
வறுப்பதற்கு அவன்களினைப் போட வேண்டம்
காணொளிக்காய் டீவி போட்டு பார்க்க வேண்டாம்
காப்பிக்காய் கரண்ட் கேத்தல் போட வேண்டாம்
ஆண் மீசை கட் பண்ண ட்ரிம்மர் வேண்டாம்
ஆப்பிள் ஜூஸ் குடிப்பதற்கு மிக்ஸி வேண்டாம்
பாண் வெட்டி ரோஸ்டரிலே போட வேண்டாம்
பானையிலே நீர் ஊற்று கூலர் வேண்டாம்


செல் போணை கரண்டில் சார்ஜ் பண்ண வேண்டாம்
சீத்தையினை கரண்ட் மெஷினில் தைக்க வேண்டாம்
உள்ள கணணி லெப்டொப் ஏதும் போட வேண்டாம்
ஊத்தையினை வோஷிங் மெஷினில் கழுக வேண்டாம்
நல்ல சூடாய் இருந்தாலும் ஏசி வேண்டாம்
நக்கலுக்காய் எழுதியது கோபம் வேண்டாம்
பில் கூட்டி உள்ளார்கள் உள்ள நாட்டில்
எல்லாமே சுமையாகும் ஏழைகளுக்கே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :