கடன் வாங்கி கடனடைக்கும் கோட்டாவின் பொருளாதாரக் கொள்கையே நாடு சீரழியக் காரணம்! காரைதீவில் சுமந்திரன் எம்.பி காட்டம்.



வி.ரி. சகாதேவராஜா-
ன்று நாடு மிக மோசமான நிலைமைக்கு சென்று இருக்கின்றது. இதற்கு அடிப்படை காரணம் கடன் வாங்கி கடன் அடைக்கும் கோட்டாவின் பொருளாதார கொள்கையே.
இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணிமான யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் காரைதீவில் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட தமிழ் அரசு கட்சி உறுப்பினர்களுக்கான சமகால பொருளாதார நெருக்கடி அரசியல் நிலைமை தொடர்பாக விளக்கம் அளிக்கும் கூட்டம் நேற்று(31) ஞாயிற்றுக்கிழமை காரைதீவு விபுலானந்த கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

அங்கு சுமந்திரன் மேலும் பேசுகையில்..

இன்று நாடு அல்லோலகல்லோலப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு அடிப்படை காரணம்
மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது போர் நடத்துவதற்கு முன்யோசனை இன்றி கண்மண் தெரியாமல் கடனை வாங்கியது தான் முதல் காரணம். அந்த கடனை அடைப்பதற்கு மேலும் கடன் வாங்கி அதனை அடைக்க முடியாமல் திணறியது. கடந்த வரவு செலவு திட்டத்தில் 74 வீத செலவினமானது கடனை அடைப்பதற்கானதாகும்.
கோட்டாவின் பொருளாதார கொள்கையானது கடன் வாங்கி கடனை அடைத்து விவதாகும்.

2019 ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டா வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலே மக்களின் வரி வசூல் சம்பந்தமாக வரிச்சலுகை கொடுப்போம் என்றார். இதனை அப்போது இருந்த நிதியமைச்சர் மங்கல சமரவீர உடனடியாக பகிரங்கமாக எதிர்த்தார். பத்திரிகை மாநாடு நடாத்தி இந்த விஞ்ஞானம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கையானது லெபனான் வெனிசுலா போல மாறும் என்றார். அதேபோல கிரீஸ் நாட்டின் பாரிய பொருளாதாரம் நெருக்கடி இலங்கைக்கு ஏற்படும் என்றும் அன்றே எச்சரித்தார்.
ஆனால் 2019 டிசம்பரில் ஜனாதிபதி கோட்டா சகல முன்மொழிவுகளையும் நடைமுறைப்படுத்தினார் .அதன் விளைவு 25 வீத வரவு இல்லாமல் போனது .வெளிநாட்டின் நிதி உதவிகள் தடைப்பட்டன.

இந்நிலையில் ரிசர்வேஷனில் இருந்த தங்கம் மற்றும் டாலர்களை விற்றார்கள். அதுமட்டுமல்ல உள்ளூர் உற்பத்தியை பாதிக்கும் வண்ணம் உரப்பாவனைக்கு தடை விதித்தார்கள்.ஏப்ரல் மாதத்திலே நாடு வங்குரோத்து நிலைக்கு வந்தது.

மக்கள் கோட்டா வீட்டுக்கு போ என்று மூன்று மாத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். விளைவாக என்ன நடந்தது என்பதை அறிவீர்கள் .

பாராளுமன்ற த்தில் இறுதியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பொழுது நாங்கள் அனைவரும் சேர்ந்து டளஸ் ஜ ஆதரவளிப்பதற்காக தீர்மானித்தோம்.

தலைவர் சம்பந்தர் ஐயா சொன்னார் நாட்டு மக்கள் ராஜபக்சவை அருவருக்கத்தக்க முறையில் வெறுக்கிறார்கள். ஆகவே அந்த ராஜபக்ஷ வின் முகவராகிய ரணிலை ஆதரிக்க கூடாது .அடுத்து நாங்கள் நிச்சயம் யாருக்காவது ஒருவருக்கு ஆதரவளிக்க வேண்டும். அது டலசாக இருக்கட்டும் என்று.
10 பேரும் ஒன்றாக இணைந்து ஏகமனதாக தீர்மானித்தோம். அதன் படி வாக்களித்தோம். நான் நினைக்கிறேன்அனைவரும் டளசுக்கு தான் வாக்களித்ததாக. ஆனால் மறுநாள் செய்திகள் எல்லாம் சற்று மாறுபட்டு வந்தது.சிலர் ரணிலை ஆதரித்ததாக.. உண்மையில் பணம் பெற்று யாராவது ரணகலுக்கு வாக்களித்து இருந்தால் அது கட்சிக்கும் மக்களுக்கும் இழைக்கின்ற பாரிய துரோகமாக அது அமையும் என்பதில் மாறுபட்ட கருத்து இடமில்லை.

இன்று ஜனாதிபதி மாளிகையில் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்பட்டதாக பலர் கைது செய்யப்படுகிறார்கள். ஜனாதிபதி வைத்திருந்த 17.8 மில்லியன் ரூபா பணத்தை பகிரங்கமாக எண்ணி போலீஸிடம் ஒப்படைத்தவரை கைது செய்கிறார்கள். இந்த காசை வைத்திருந்தவரை விட்டு விடுகிறார்கள்.

அங்கு இருந்த நீர் தடாகத்திலே சோப் போட்டு குளித்தவரை தேடிக் கொண்டிருக்கின்றார்கள் .இதுவா இன்றைய பிரச்சனை ?

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஆட்சி தான் இன்றும் இருக்கின்றது . தொடர்கிறது.அதே தலைமை அதே பிரதமர் அதே அமைச்சரவை.

ஆகவே நிதானமாக யோசிக்கின்றோம். இந்த இடத்திலே தமிழ் மக்களாகிய நாங்கள் ஒற்றுமையுடன் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும் நன்றி என்றார்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சுமந்திரன் பதிலளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :