ஒரே ஒரு முஸ்லிம் தலைமை என்றால் அது மு.கா தலைவர் ஹக்கீம் மட்டும்தான் : கிழக்கின் கேடயம் சபீஸுக்கு எஹியாகான் விளக்கம்.



நூருள் ஹுதா உமர்-
முகா தலைவர் ரவூப் ஹக்கீமை விமர்சிப்பதற்கு கிழக்கின் கேடயம் அமைப்பின் செயற்பாட்டாளர் எஸ்.எம் சபீஸுக்கு எந்தவொரு அருகதையும் இல்லை என முகா பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறித்து அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், கிழக்கின் கேடயம் அமைப்பின் செயற்பாட்டாளர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே யஹியாகான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

அதாவுல்லா அணியைச் சேர்ந்த சபீஸ் - அதாஉல்லாவுக்கு முதலில் விசுவாசமாக இருந்து காட்டட்டும். இரட்டை வேடம் போடுவதை அவர் முதலில் நிறுத்த வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்திற்கு கடந்த 3 தசாப்தங்களாக தலைமைத்துவம் வழங்கி வரும் ரவூப் ஹக்கீமை விமர்சிக்க எந்தவொரு தகுதியுமற்றவர் சபீஸ்.
வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாடு பூராகவும் சர்வதேசம் வரை அறியப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் தலைமை என்றால் அது மு.கா தலைவர் ஹக்கீம் மட்டும்தான்.
சமூகம் சார்ந்த விடயங்கள் மாத்திரமன்றி தேசியப் பிரச்சினை வரை அனைத்து விடயங்களிலும் பொறுப்புணர்ச்சியோடு செயலாற்றி வரும் தலைவர் என்றால் அதுவும் ரவூப் ஹக்கீம் தான். சபீஸ் என்பவர் தேசிய காங்கிரஸை சேர்ந்தவர். முஸ்லிம் காங்கிரஸை அழிக்க துடிக்கும் அதாஉல்லா அணியைச் சேர்ந்தவர்.

ரணில் சாரதியாக இருக்கும் வாகனத்தில் ஒருபோதும் ஏறப்போவதில்லை என்ற முகா ஸ்தாபகத் தலைவரின் கோட்பாட்டுக்கு முரணாக செயற்படும் - அதேபோல் , அண்மைக்காலமாக ரணிலை தரக்குறைவாக விமர்சித்த அதாஉல்லா - இன்று பிரயோசனமற்ற அமைச்சுப் பதவி எனும் எலும்புத் துண்டுக்காக ரணிலை புகழ்வது மிகவும் வெட்கக்கேடானது. அது குறித்து கேட்க , அறிவுரை கூற திராணியற்ற சபீஸ் - முகா தலைமையை விமர்சிப்பது கேவலத்திலும் கேவலமான செயற்பாடாகும்.
வடக்கு, கிழக்கு பிரிப்பு விடயத்தில் தலைவர் ஹக்கீம் ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளார். முஸ்லிம்களின் நிலைப்பாடானது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டும் பிரிந்திருக்க வேண்டும் என்பதாகும். அந்த நிலைப்பாட்டில் ஹக்கீம் உறுதியாக இருக்கிறார்.

முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள், ரவூப் ஹக்கீமை எவ்வித சந்தேகமுமின்றி பூரண விசுவாசத்துடன் ஏக தலைமைத்துவமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அது ஒருபோதும் சவாலுக்குட்பட்ட விடயமாக இருக்கவே இருக்காது என்பதை சபீஸ் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ரவூப் ஹக்கீம் - கட்சிக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் தலைமை வகிக்கக்கூடிய அனைத்து தகுதிகளையும் ஆற்றல்களையும் கொண்டிருக்கிறார். அதற்கு நிகர் அவரேதான்.

முடிந்தால் - ரவூப் ஹக்கீமை விட அல்லது அவருக்கு சமனான ஒருவரை முகா தலைமையாக இணங்காட்ட சபீஸால் முடியுமா என்ற கேள்வியை சவாலாக விடுக்க விரும்புகிறேன் என்றும் யஹியாகான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :