கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தன் அதிகாரத்தை உபயோகிக்க முட்டுக்கட்டை இடும் நபர்கள் வடகிழக்கு இணைய இணங்குவார்கள் என்பது தமிழ்த் தேசிய கட்சிகளின் பகல் கனவே. நிதான்சன்காரைதீவு சகா-
ல்முனை வடக்கு பிரதேச செயலகம் தன் அதிகாரத்தை உபயோகிக்க முட்டுக்கட்டை இடும் நபர்கள் வடகிழக்கு இணைய இணங்குவார்கள் என்பது தமிழ்த் தேசிய கட்சிகளின் பகல் கனவே. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் நிதான்சன் காட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தன் அதிகாரத்தை உபயோகிக்க முட்டுக்கட்டை இடும் நபர்கள் வடகிழக்கு இணைய இணங்குவார்கள் என்பது தமிழ்த் தேசிய கட்சிகளின் பகல் கனவே ஆகும்.

இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ. நிதான்சன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..

வடகிழக்கு இணைப்பு எனும் நோக்கோடு சிறுபான்மை சமூகமாக ஒன்றிணைய வேண்டும் எனவும் அதன் ஊடாக தமிழ் பேசும் சமூகம் ஒற்றுமை என்று எல்லாம் தமிழ் தலைவர்கள் பேச தவில் அடிப்பது போன்று கிழக்கில் தமிழர் அடிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றர்.

1993 ஆண்டு முதல் முழு அதிகாரத்தோடும் இயங்கி வந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வர்த்தமானி இல்லை என கூறி துண்டாக துண்டாக சிதைக்கின்றனர்.மூன்று தசாப்தத்திற்கு மேல் இன்று பிரதேச செயலகம் எனும் நிர்வாக அலகின் அதிகாரம் முழுமையாக இன்னொரு பிரதேச செயலகத்தின் வரம்பு மீறிய செயலால் பாதிக்கப்பட்டு வருகின்றது.காரணம் கேட்டால் பிரதேச செயலகம் எனும் வர்த்தமானி இல்லை என கூறுகின்றனர்.

குறிப்பாக கோறளைப்பற்று மத்திக்கு இதுவரையில் பிரதேச செயலகத்துக்கு வர்த்தமானி இல்லை ஆனால் சுயாதீனமாக இயங்குகின்றது.ஆனால் இன்று 29கிராம சேவகர் பிரிவையும் உள்ளடக்கி செயல்படும் பிரதேச செயலகத்தின் சுயாதீன தன்மையை இல்லாதொழிக்க மிகத் தீவிரமாக இனவாத அரசியல்வாதிகளும் இனவாத அமைப்புக்களும் செய்கின்றன.இதற்கு அரச அதிகாரிகளும் துணை செல்கின்றனரா?
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக காணி பதிவகத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட காணி பதிவக உரிமை மறுக்கப்பட்டது.அதேவேளை நேற்று முன் தினம் அரச வலைத்தளத்தில் இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலக 29கிராம சேவகப் பிரிவுகளும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.எந்த அடிப்படையில் இது நியாயம் ? அதேவேளை ஒன்றைச் சிந்திக்க வேண்டும் உப பிரதேச செயகலமான தோப்பூர் பிரதேச செயலகத்துக்கு இலக்கமிடப்பட்டு அவை அமைச்சின் அரச வலைத்தளத்தில் காட்டப்படுகின்றது. இது அரச கட்டமைப்பில் இனவாத அரசியல் தலையீட்டின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். பாகுபாட்டுடன் தொடர்ந்து கல்முனை மக்கள் புறக்கணிக்கப்பட்டு நடத்தப்படுமானால் இன நல்லிணக்கம் என்ற சொல்லை தேடிச் செல்ல வேண்டி நிலை ஏற்படும். கல்முனை மக்களின் மனநிலை மிக கொதிப்படைந்துள்ளது. விரைவில் முடிவு ஒன்றினை பெற நாம் ஒற்றுமையாக வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

மேலும் இவ்வாறு இம்சை தரு நடவடிக்கைகளுக்கு இறுதி முடிவு எட்ப்படும் காலம் விரைவில் என்பதனை இனவாத அரசியல்வாதிகள் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமைக்காக மட்டுமே குரல் கொடுத்து வருகின்றது.ஆனால் இனவாதம் தலைதூக்க இனி ஒரு போதும் இடமளியோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :