காரைதீவில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி.காரைதீவு சகா-
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் தனது 35 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டுசபாபதி-சோதியம்மா ஞாபகார்த்த நிதியத்தின் அனுசரணையில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இச் சுற்றுப் போட்டியில் காரைதீவு,சம்மாந்துறை ,சொறிக்கல்முனை, ஆலையடிவேம்பு, வளத்தாப்பிட்டி ஊர்களைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றுகின்றன.
இறுதிப் போட்டியானது எதிர் வரும் 28.08.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது என கழக செயலாளர் கே.உமாரமணன்( தொழில்நுட்ப உத்தியோகத்தர்) தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :