வாழைச்சேனை முகைதீன் ஜும்மா பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் தலைவரும் அல் நஹ்ஜத்துல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான அல்ஹாஜ் எம்.எல்.ஹச்சி முகம்மட்டின் மறைவை முன்னிட்டு வாழைச்சேனை பிரதான வீதியில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு கடைகளை மூடி துக்கதினமாக வர்த்தகர்கள் இன்று மாலை அனுஸ்டித்தனர்.
வாழைச்சேனை வர்த்தக சங்கம் அல்ஹாஜ் எம்.எல்.ஹச்சி முகம்மட்டின் மறைவை முன்னிட்டு வர்த்தகர்களிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் முடப்பட்டுள்ளதுடன் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டடுள்ளதுடன் பிரதேசத்தின் விளையாட்டு கழகங்களின் காரியாலயத்திற்கு முன்பாகவும் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.
0 comments :
Post a Comment