வாழைச்சேனை அல் நஹ்ஜத்துல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபக தலைவர் மரணம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை முகைதீன் ஜும்மா பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் தலைவரும், அல் நஹ்ஜத்துல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான அல்ஹாஜ் எம்.எல்.ஹச்சி முகம்மட் சிறிது காலம் நோயுற்ற நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.

இவர் பல வருட காலமாக கல்குடா பிரதேச சமூக நலன் விடயங்களில் தனது வாழ்வை அர்ப்பணித்த நல்லுள்ளம் கொண்ட மனிதர் என்பதுடன், மார்க்க ரீதியாக கல்குடா பிரதேசத்தில் விழிப்புணர்வையூட்டி நூற்றுக்கணக்கான ஹாபிழ்களை உருவாக்கி மண்ணுக்குப் பெருமை சேர்த்த பெருமகனாவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை 04ம் வட்டாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மாலை 05 மணிக்கு அல் நஹ்ஜத்துல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு இஷா தொழுகையினை தொடர்ந்து ஹைராத் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :