ஜனாதிபதியை தமிழ் முற்போக்கு கூட்டணி 11ம் திகதி சந்திக்கும். நாளை ஐமகூ-ஜனாதிபதி சந்திப்பிலும் இடம்பெறும்– தமுகூ தலைவர் மனோ கணேசன்



மிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆகஸ்ட் 11ம் திகதி நேரடியாக சந்தித்து மலையக தமிழ் இலங்கையர்களின் அபிலாசைகள் தொடர்பில் குறிப்பாகவும், தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவாகவும் கலந்துரையாடும். “பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான தேசிய சர்வகட்சி வேலைத்திட்டம் ஒன்றினை செயல்படுத்துதல்” தொடர்பில், ஜனாதிபதி தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு விடுத்துள்ள அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெறும்.

அதேவேளை, நாளை ஆகஸ்ட் 5ம் திகதி ஐக்கிய மக்கள் கூட்டணியின் தூதுக்குழுவிலும் இடம்பெற்று பொதுவான தேசிய பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடுவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :