நாடு தற்போது எதிர்கொண்டுள்ள உணவுப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் உப உணவுப் பயிர் உற்பத்தியைப் பெருக்குவதற்காக மரக்கறிக் கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டு வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் மரக்கறிக் கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டு வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு செயலகத்தில் இடம்பெற்றது.
அல்-இன்ஷானியா நிறுவனம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் இணைந்து தெரிவு செய்யப்பட்ட 200 பயனாளிகளுக்கான இரண்டு பழமரக்கன்றுகள் உள்ளடங்களாக மிளகாய், கத்தரி, தக்காளிக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment