ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் முறைமைப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் முறைமைப்படுத்தப்பட்ட முறையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு அமைவாக மோட்டார் வாகனங்களின் இலக்கத்தகட்டின் இறுதி எண்ணின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் எரிபொருள் வழங்கும் நடவடிக்கையின் போது முறைகேடுகள் இடம்பெறாது இருக்கும் வகையில் (சாஃப்ட்வேர்) கணினி மென்பொருள் ஒன்றினை பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக் கொள்ள வரும் அனைத்து வாகன இலக்கங்களும் கணனி மயப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நடவடிக்கையானது கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.ஹாதி நெறிப்படுத்தலுடன் ஓட்டமாவடி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.எம்.எம்.ஜெஸ்லின் தலைமையில் மிகச் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் நிலையத்தினூடாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மதகுருமார்கள், விவசாயிகள், வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் என பல்வேறு தரப்பினர்கள் உள்ளடங்களாக இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் தமக்கான எரிபொருளைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :