அழகிய தமிழ் மகள் மீனா உதயா பம்பலப்பிட்டியில் உள்ள மல்லிஹா ஜோசப் கல்வி நிறுவனத்தில் கௌரவிக்கப்பட்டாா்அஷ்ரப் ஏ சமத்-
லங்கைக் கலைஞர் திருமதி மீனா உதயக்குமாா் ஓர் சமூக செயற்பாட்டாளா் ,ஹிந்து மதப் பக்தி ஆன்மீக செயற்பாட்டாளா். அவா் ஆசிய நாடுகளின் பசுமைப் புரட்சியின் செயலாளராகவும் ஜெர்மனியில் கடமையாற்றுகின்றாா்.இதில் 20 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. இந்தியா நாடு இவரை செயலாளராக நியமித்துள்ளது. .. அவா் தற்பொழுது ஜேர்மனியில் இடம்பெயா்ந்து வாழ்ந்து வருகின்றாா்.அங்கு அவா் அழகிய தமிழ் மகள் எனும் நிகழ்ச்சியினை நடாத்தி அதனை தயாரிப்பாளராகவும் கடந்த 20 வருடகாலமாக செயற்படுத்தி வருகின்றாா்.

மீனா உதயகுமாருக்கு அழகிய தமிழ் மகள் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்வு நேற்று முன்தினம் 24 ஞயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டியில் உள்ள மல்லிஹா ஜோசப் அவா்களின் சமயல் கல்வி நிலையத்தில் நடைபெற்றது. மல்லிகா ஜேசப். சரினா முஸ்தபா, நாஹபூசனி, நுாறுல் ஜயின் நஜூமுல் ஹூசைன், நசிரா ரமீஸ் மற்றும் பரதநாட்டிய கலைஞா்கள், அழகுக் கலை கலைஞா்கள் ,சங்கீத ஆசிரியைகள் மற்றும் ஊடகவியலாளா்களும் இனைந்து மீனாவுக்கு பச்சொன்டுகள், பரிசில்கள் வழங்கி விருதும் வழங்கி கௌரவித்தனா்.

மீனா அடுத்த வாரம் மட்டக்களப்பில் பசுமைப் புரட்சித் திட்டத்தினை ஆரம்பிக்க உள்ளாா் முதன் முதலாக மட்டக்களப்பில் பனை மரங்களை நட்டு அப்பிரதேச மாணவ மாணவிகளுக்கு மரங்களை வளா்த்தல் பசுமை நிகழ்ச்சியை ஆரம்பித்தும் வைக்கவுள்ளாா்.

அவா் அங்கு உரையாற்றுகையில்

நான் யாழ் பிறந்து இராமநாததன் கல்லுாாியில் பயின்று கிளிநொச்சியில் இடம்பெயா்ந்து சிலாபத்தில் வாழ்ந்து கொழும்பில் ஆண்மீகப் பக்திப் பாடல், அறிவிப்பாளா்,நாடகம் பாடகா் என பலதுறைகளில் கொழும்பில் செயற்பட்டு வந்தாா். அதன் பின்னா் ஜேர்மனியில் புலம்பெயா்ந்தாா். .. ஜெர்மனியில் மரங்களை தமது குழந்தைகள் போன்று பாதுகாக்கின்றனா். ஒரு போதும் மரங்களை வெட்ட மாட்டாா்கள். மரங்களை வெட்டுவதென்றால் அரசிடம் அனுமதி பெறுவாா்கள். ஒரு 80 ஆயிரம் ஈரோ பெருமதி வாய்ந்த காா் ஒரு மரத்தினை மோதி சேதப்படுத்தினாலும் காா் பெருமதியை விட அந்த மரத்திற்கான நஸ்ட ஈட்டினையே அந்த அரசு பெற்றுக் கொடுக்கும். ப. அந்த அளவுக்கு அங்கு பசுமைப் புரட்சியுள்ளது. நாம் நமது நாட்டில் பணை மரங்களை நட்டு அதனை பராமரித்து அதனை வளா்த்தெடுத்தல் வேண்டும். மரம் நடும் விடயமாக இலங்கையில் உள்ள மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கும் திட்டமொன்றைச் செயற்படுத்த உள்ளேன். இலங்கையில் முதன் முதலாக மட்டக்களப்பிலேயே இத்திட்டம் ஆரம்பிக்க உள்ளேன் . ஏனைய பிரதேசங்களிலும் இத் திட்டம் விஸ்தரிக்கப்படும். எனவும் மீனா உதயா அங்கு உரையாற்றினாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :