முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.எம்.மன்சூர் நினைவாக விசேட துஆ பிராத்தனைஏ.எல்.எம்.ஷினாஸ்-
முன்னாள் வர்தக வாணிபத்துறை அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.எம்.மன்சூர் மரணித்து  05 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இவரது நினைவாக நேற்று (25.07.2022) கல்முனை முகையதீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனை நடைபெற்றது.

இவர் 1977ம் ஆண்டு கல்முனைத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 5547 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
1979ம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராகவும் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இது இலங்கையின் வரலாற்றில் தமிழ் முஸ்லிம் உறவின் வலிமை பொருந்திய காலமாகக் காணப்பட்டது. 1994 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வரைக்கும் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பல பதவிகளை வகித்து சேவையாற்றிhர்.

இவரது சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்கும் நோக்கில் ஏ.ஆர்.எம்.மன்சூர் பௌண்டேசன் எனும் சமூக அமைப்பு உருவாக்கப்பட்டு பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விசேட துஆ பிராத்தனையையை பள்ளிவாசல் பேஸ் அஸ்செய்க் எம்.ஜெப்றான் மௌலவி நிகழ்த்தியதுடன் இதில் ஏராளமான பிரதேச பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :