கல்முனையில் எரிபொருளுக்காய் காத்திருந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் ; இரவு உணவினை உண்ணும் முகமாக வீதியின் அருகில் ரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டனர் ..!எம்.என்.எம்.அப்ராஸ்-
நாட்டில் தற்பொழுது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பலரின் வாழ்வியல் நெருக்கடி நிலையில் காணப்படுகின்றது

அம்பாரை மாவட்டத்தில் முச்சக்கரவண்டி (ஆட்டோ)ஓட்டுவதை தங்களது வாழ்வாதரமாகக் கொண்ட முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் கல்முனையில் எரிபொருளைபெற கடந்த மூன்று நாட்களாக நீண்ட வரிசையில் முச்சக்கரவண்டியினை நிறுத்தி வைக்கப்பட்டு தமக்கு எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரவு பகலாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் தமது இரவு உணவினை உண்ணும் முகமாக வீதியின் அருகில் விறகினை பயன்படுத்தி ரொட்டி தயாரிப்பில் ஈடுபட்ட சம்பவமொன்று (05) செவ்வாய்கிழமை பதிவாகியது.

தினசரி முச்சக்கர வண்டி ஓட்டுவதினுடாக தங்களது வாழ்வாதரமாகக் கொண்டு உள்ளதாகவும், தங்களுக்கு முச்சக்கர வண்டிகளைச் செலுத்துவதற்கு பெற்றோல் கிடைக்காதது மிகவும் சிரமமாகவுள்ளதாகவும்,
வருமானமின்றிய நிலையில் கடந்த 03 நாட்களாக வீதியில் காத்திருப்பதுடன் எரிபொருள் நிலையத்துக்கு அருகில் முச்சக்கர வண்டியினை நிறுத்தி வைத்துக்கொண்டு சீரான உணவு ,உறக்கமின்றி வீடுகளுக்கு சென்றுவரக் கூட எரிபொருள் இல்லாத காரணத்தினால் குடும்பங்களை பிரிந்து எரிபொருளினை பெற பெரும்சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் எரிபொருள் கிடைக்காமையினால் அவ் இடத்தை விட்டு முச்சக்கர வண்டி நகர முடியாத நிலையில் இருப்பதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் கவலையினை வெளிப்படுத்தினர்.
மேலும் தமக்கான எரிபொருளை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :