பொது மக்களுக்கு நியாயமான முறையில் எரிபொருளை விநியோகிக்கும் முகமாக பொலிஸாருக்கு உதவும் வகையில் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்



J.f.காமிலா பேகம்-
"அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் இராணுவச் சட்ட விதிகளுக்கு இணங்க இலங்கை இராணுவம் மற்றும் சகோதர சேவை உறுப்பினர்கள் தற்பொழுது நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு உதவ இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சில நியாயமான எரிபொருள் விநியோகத்திற்கான அனைத்து முயற்சிகளும் குறித்த படையினரால் மேற்கொள்ளப்படும் அதேவேளை, சில சுயநலம் கொண்ட நபர்களால் வேண்டுமென்றே அநாகரீகமாக செயல்படுத்தப்பட்டதாக பொலிஸார் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளதுடன் அந்த சில அநாகரீகமான, மற்றும் ஆத்திரமூட்டும் நிகழ்வுகள் உட்பட, பல்வேறு மோதல் சூழ்நிலைகளைத் தீர்க்க குறித்த பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அத்தகைய கும்பலைக் கட்டுப்படுத்த பொலிஸார் உதவியை நாடியதால், அந்த பாதுகாப்பு படையினர்களால் சிறந்த வெளிப்படையான முறையில் அது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல சமூக ஊடக வலைப்பதிவுகள் மற்றும் வீடியோ தொகுப்புக்கள் பரவிவருகின்றதுடன் எரிபொருட்களை சரியான முறையில் விநியோகிக்க உதவும் போது பாதுகாப்பு படையினர் அவமானப்படுத்தப் படுதல் அல்லது வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்யப்படும் அடிப்படை உண்மைத்தன்மையினை வெளிப்படுத்தாமல் அவற்றில் சிலவை வேண்டுமென்றே தொகுக்கப்பட்டவையாகவும் அல்லது சர்ச்சையின் ஒரு பக்கம் அல்லது பக்க சார்புள்ள முனையை மட்டும் முன்னிறுத்துவது அல்லது உண்மையான நிலமைகளை சரியாகக் காட்டாமல் பிரித்தெடுக்கப்பட்ட தொகுப்புகள் உட்பட தொடர்ச்சியான ஊடக அறிக்கைகள் இராணுவத்தால் கண்காணிக்கப்பட்டன. இத்தகைய முயற்சிகள் அடிப்படை ஊடக நெறிமுறைகளுக்கும் முற்றிலும் முரணானது.

இராணுவம் மக்களின் விரக்திகளையும் சிரமங்களையும் தற்போதைய சூழ்நிலையில் முழுமையாக புரிந்துகொள்வதுடன் பாதுகாப்பு படையினரை கேலி செய்வதற்காக சில சக்திகளின் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்றவாறு கண்ணுக்கு தெரியாத நபர்களினால், பொதுமக்களுக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையே பகையை ஏற்படுத்தும் முகமாக சில இராணுவ உறுப்பினர்களை ஒழுக்கமற்ற, ஒழுக்கக்கேடான இயல்புடைய 'அடக்குமுறை சக்தியாக' முன்னிறுத்துகின்ற சில ஊடக தொகுப்புக்கள் பரவிவருகின்றன.

டோராஹிதியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யக்கபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் அத்தகையதொரு சமீபத்திய உதாரணமாகும். குடிபோதையில் இருக்கும் நபரின் வன்முறை நடத்தையை வெளிப்படுத்தாமல் இராணுவ உறுப்பினரை கேலி செய்யும் முகமாக, அவரின் கோப தன்மைக்கு ஊடகங்களில் அதிகமாக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகமானது இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக ஆராய்ந்து அது தொடர்பான பரிந்துரைகளை வழங்கும் முகமாக ஒரு பிரிகேட் தளபதியின் தலைமையில் உடனடியாக ஐந்து பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தை நியமித்துள்ளது. இதேவேளை, குறித்த சிவில் நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் மற்றுமொரு சிவில் நபரின் வன்முறையினால் இராணுவ உறுப்பினர் ஒருவர் வெட்டுக் காயங்களுக்குள்ளாகி எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் இங்கு நினைவுகூருவது பொருத்தமானதாகும்.

பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில், பதட்டமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளில் இரவும் பகலும் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன் மக்களின் நலன்களுக்காக சேவை செய்ய அயராது தயாராக உள்ள இராணுவம் மற்றும் சகோதர சேவை உறுப்பினர்கள் பொதுமக்களின் கடினமான சவால்களை நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே, கடந்த காலங்களில் நீங்கள் அனைவரும் போற்றத்தக்க வகையில் நீங்கள் பாதுகாப்பு படையினருக்கு வழங்கிய ஒத்துழைப்பினை போல் உங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அந்தந்த பகுதிகளில் பணியமர்த்தப்பட்டிருக்கும் அவர்களுக்கு உங்களின் ஒத்துழைப்பினை வழங்குமாறு பொதுமக்கள் மிகவும் தாழ்மையுடன், பரந்த புரிந்துணர்வு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
(ஊடக அறிக்கை-இலங்கை ராணுவம்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :