வைத்தியசாலைகளுக்கு பூட்டு: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்ரிபொருள் பிரச்சினை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதேச வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவையாளர்கள் பணிக்கு செல்ல மற்றும் வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல எரிபொருள் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரையில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியர்கள் மற்றும் சேவையாளர்கள் எரிபொருள் பிரச்சினையினால் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகிவருவதாக வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை வைத்தியசாலை, சிறுநீரக வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளதாகவும், சிறுவர் வைத்தியசாலை, பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். TM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :