ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் சுமார் ஒன்பது இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!

ஏறாவூர் சாதிக் அகமட்-

றாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு,  ஏறாவூர் நகரபிரதேச செயலாளர்  நிஹாரா மௌஜூத்தினால்   கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வானது அமைப்பின் தலைவர்   எம்.எல் செயட் அஹமடின்  தலைமையில் இடம் பெற்றது. பிரதம அதிதியாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் .நிஹாரா மௌஜூத்தும் , கௌரவ அதிதியாக சமூக சேவை உத்தியோகத்தர்  எஸ்.ஏ.சி. நஜிமுதீனும்  அதிதிகளாக ஹிதாயத் நகர் கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். இப்றாஹீம் , மீராகேணி கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஜே. அஸ்கான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். இர்பான், மட்/மம/டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் அதிபர்.எம்.எம். ஐலால்தீன் அதிபர், ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் வழிநடாத்துனர்களான எம்.எம். றியாஸ், ஏ.எம். குத்துஸ் ஹாஜியார், ஏ.எல்.ஏ. ஹசன் ஹாஜியாரின்  புதல்வன் ஏ.எச்.எம். பஹத், பீ.கே ரசாக்கின்  புதல்வன் எம்.ஆர். ரசாத் ஹாபிழ்ளும்  அமைப்பின் உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த

பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத்  ஏறாவூரில் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களில்  ஒரு சில அமைப்புக்கள் மாத்திரமே சிறப்பாக இயங்குகின்றது இதில் ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியமும் ஒன்றாகும்.  இவ்வமைப்பானது சுமார் ஒருவருட காலமாக இயங்கி வருகின்றது இதன் செயற்பாடுகள் அனைத்துமே ஏழை மக்களை சென்றடைகின்றது அத்தோடு ஒருவருட காலத்தை முன்னிட்டு இவ்வீடு கையளித்திருப்பது மகிழ்ச்யளிப்பதாகவும் இவ்வீட்டிற்கு சுமார் 9 இலட்சம் ரூபாய் அமைப்பின் அங்கத்தவர்களின் அயராத முயற்சியால் தனவந்தர்கள் ஊடாக பெற்று அமைக்கப்பட்டுள்ளது.  இதன் பிரதானியாக இவ்அமைப்பின் ஸ்தாபர்    எம்.எச்.எம். இஸ்ஸத் அவர்களின் முயற்சியாகவே அமைந்திருந்தது. இவ்வீடானது ஏழைக்குடும்பத்தை தெரிவு செய்து கையளிக்கப்பட்டது சமூக மட்ட அமைப்புக்களுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :