சமூக சேவகி நளீமா இந்தியாவில் கௌரவிப்பு!ஹஸ்பர்-
ந்தியாவின் ஐக்கிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் அமைப்பின் தலைமை அலுவலகமான சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் அமைந்திருக்கும் அலுவலகத்தில் இலங்கை பெண்கள் உதவி அமைப்பின் தலைவியும் சமூக செயற்பாட்டாருமான பெண் ஆளுமையான எஸ். நளீமா தனது சமூகசேவைக்காக அண்மையில் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அதேவேளை சமூக செயற்பாட்டாளர் நளீமா ஐக்கிய மக்கள் பாதுகாப்பு நுகர்வோர் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அடையாள அட்டையும் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு ஐக்கிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் அமைப்பின் நிறுவனத் தலைவர் லயன் அம்பாசிடர் முனைவர் ந. இராமசந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் அமைப்பின் மாநிலத் தலைவர் முனைவர் ஏ. செல்வராஜ், மாநில பொதுச் செயலாளர் முனைவர் என்.என். வர்மன், மாநில செயலாளர் முனைவர் ஜீ. மணிவண்ணன் மாநில PRO திரு எஸ்.குணசேகரன், மாநிலத் தலைவர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு மருத்துவர் பூபாலன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு.கே. மகேந்திரன் ,தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் திரு கோபிநாத் மற்றும் அமைப்பின் புதிய பொறுப்பாளர்களான திரு பிரகாஷ், சுந்தர், தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :