முச்சக்கர வணடிக்காரர்கள் சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்



காலித்தீன் யூ.கே.-
நேற்று காலை 10.30 மணிமுதல் பி.ப. 12.30 மணிவரை சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள முச்சக்கர வண்டிக்காரர்கள் தங்களுக்கு போதியளவு எரிபொருள் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சாய்ந்தமருது ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகம் வரை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவு முச்சக்கர வண்டிக்காரர்கள் கலந்து கொண்டார்கள்.
முதலில் முச்சக்கர வண்டிக்காரர்கள் சாய்ந்தமருது ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் தமது முச்சக்கர வண்டிகளை நீண்ட வரிசையில் நிறுத்தி விட்டு தங்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோசமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் அங்கிருந்து கோசமிட்டவாறு தமது முச்சக்கர வண்டிகளை தள்ளிக் கொண்டு சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சாய்ந்தமருது பிரதேச செயலகத்தை அடைந்தனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக்கை சந்தித்து மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதேச செயலகத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு சென்றார்கள். அங்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீனை சந்தித்து அவரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

மகஜர்களை கையளிக்கும் போது தங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்குரிய இலகு நடவடிக்கைகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.
பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர்கள் முச்சக்கர வண்டிக்காரர்களின் மகஜரை ஏற்றுக் கொண்டதோடு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஆவணை செய்வதாகவும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :