23ம் பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி பிரிகேடியின் அழைப்பின் பேரில் அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாறூன் ஸஹ்வி மற்றும் ஏவிஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சதீக் ஆகியோர் சந்தித்தனர்எஸ்.எம்எம்.முர்ஷித்-
23ம் பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி பிரிகேடியின் அழைப்பின் பேரில் அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாறூன் ஸஹ்வி மற்றும் ஏவிஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சதீக் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) 23ம் படைப்பிரிவின் கட்டளை தலமையகத்தில் சந்தித்தனர்.
23ம் பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் பணிப்பாளர்களுக்கு இடையிலான உத்தியேகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாகவும் அதை சீர் செய்வது தொடர்பாக இராணுவத்தினர் பொதுமக்களுடன் நல்லுறவை பேணுதலின் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

அனர்த்தங்களின் போது பிரதேச அனர்த்த அவசர வாகன உதவி, ஏவிஷன் நிறுவனத்தின் அவசர செயற்பாடுகளை 23ம் பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி பாராட்டியதுடன் தற்போதைய சூழ்நிலையில் வறிய மக்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அல்கிம்மா நிறுவன பணிப்பாளரை கேட்டுக்கொண்டார்.

அதற்கான ஏற்பாடுகளை அல் கிம்மா நிறுவனம் ஏற்பாடு செய்வதுடன் இராணுவம் மற்றும் ஏவிஷன் நிறுவனம் இணைந்து அதற்கான ஒத்தாசைகளை வழங்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :