ஊடகவியலாளர்களுக்கு பாராளுமன்றத்தில் மரண அச்சுறுத்தல்!



ஆர்.சனத்-
பாராளுமன்றத்தில் இன்று (2022 - 05 - 07), ஆளுங்கட்சிகுழுக் கூட்டம் முடிவடைந்த பிறகு, அங்கிருந்து வெளியேறும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒளிப்பதிவு செய்த, ஊடகவியலாளர்களான பிரகீத் பெரேரா, கசுன் சமரவீர ஆகிய இருவரினதும், தொலைபேசிகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதை எமது சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
தொலைபேசி ஊடாக, பாராளுமன்ற அறிக்கையிடல் நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது, பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு கறுப்பு புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகியுள்ள பின்பலத்தில், ஜனநாயகத்தின் பிரதான ஸ்தாபனமாகக் கருதப்படும், பாராளுமன்றத்தில் வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை சாதாரண விடயமாக கருதிவிடமுடியாது.
இவ்வாறான சம்பவங்கள் மீள இடம்பெறாமல் இருப்பதை உறுதிபடுத்தவும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமையை, தவறாக பயன்படுத்தியுள்ள சம்பந்தப்பட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நீங்கள் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் அவதாமாகவே இருப்போம்.
-இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் -
(சபாநாயகருக்கு இன்று அனுப்பிவைத்துள்ள கடிதம் இணைப்பு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :