ஏறாவூர் நகர மத்தியஸ்த சபை குழாத்திற்கான புதிய மத்தியஸ்தர்கள் நியமனம்!


ஏறாவூர் சாதிக் அகமட்-
219ம் இலக்க ஏறாவூர் நகர மத்தியஸ்த சபைகள் குழாத்திற்காக 33 மத்தியஸ்தர்கள் (26 ஆண்கள், 07 பெண்கள்) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சை , 5 நாள் பயிற்சி மற்றும் பரீட்சை என்பவற்றில் பெற்றுக்கொண்ட புள்ளிகள் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மத்தியஸ்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு. கணபதிபிள்ளை கருணாகரன் கலந்து சிறப்பித்ததுடன் அதிதிகளாக ஏறாவூர் நகர பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. M.A.H. சிஹானா, முன்னாள் மத்தியஸ்த சபை தவிசாளர் M.M. இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீதி அமைச்சின் கீழ் உள்ள மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களான மத்தியஸ்த பயிற்றுனர் M.I.M ஆஸாத், மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியாத்தர்களான

திருமதி. சாந்த தர்மினி விமலச்சந்த்துரு மற்றும் M.A.M அஜுன் ஆகியோரின் நெறிப்படுத்தலோடு மேற்படி நிகழ்வு நடைபெற்றதுடன்,

ஏறாவூர் நகர மத்தியஸ்த சபைகள் குழாத்தின் புதிய தவிசாளராகவும் முதலாவது பெண் தவிசாளராகவும் திருமதி பஹியா அப்துல் காதர் நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :