கல்முனையில் தமிழர்களின் காணி உரிமை கபளீகரம்! கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜன் கண்டனம்.காரைதீவு சகா-
ல்முனை மாநகரத்தில் தமிழர்களின் இருப்பை இல்லாதொழிக்கும் சதித்திட்டத்தின் ஓரங்கமாக காணி பதியும் உரிமை கச்சிதமாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இவை ஒருபோதும் இன உறவை வலுப்படுத்த உதவாது.மாறாக விரிசல்களை ஏற்படுத்தும்.இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது....

கல்முனை காணி பதிவகத்தில் காணி மற்றும் ஆவணங்கள் பதிவு நடவடிக்கைகள் பிரதேச செயலக ரீதியில் 2012 இல் இருந்து பதிவு செய்யப்பட்டு வந்தது.
13 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கி கல்முனை காணி பதிவகம் இயங்கி வருகிறது.
காணி பதிவகத்தின் கீழ் கல்முனை வடக்கு செயலக பிரிவின் கீழ் உள்ள 29 கிராம சேவகர் பிரிவில் உள்ள காணிகள் இதுவரை காலமும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் பதிவு செய்யப்பட்டு வந்தது.

கல்முனையின் இன வாதத்தையும், இன குரோதத்தையும் விதைத்து அரசியல் செய்து வரும் வங்குரோத்து அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான அழுத்தத்தினால் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உரிய பதிவு நடவடிக்கை அனைத்தும் கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் மாற்றப்பட்டு உள்ளது.
பதிவாளர் நாயகத்தின் கடித்தின் பிரகாரமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திலிருந்தும் தமிழ்பிரதேச காணிப் பதிவுகளை அங்கு பதியவேண்டாம்.இனிமேல் எமது செயலகத்தின் பெயரின் கீழ் மட்டுமே பதியவேண்டும் என பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம்.
இந்த விடயம் கல்முனையில் தமிழ் முஸ்லிம் இன விரிசலை மேலும் வலுப்படுத்தி அரசியல் ஆதாயம் பெறவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உறவு கொண்டாடும் தலைமைகள் இது விடயத்தில் கவனம் எடுப்பார்களா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :