அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிற்கு சுகாதார அமைச்சினது கள விஜயம்



சியாத்.எம்.இஸ்மாயில், பட உதவி.வி.மாதவன்-
க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சுகாதார பராமரிப்பு, தர முகாமைத்துவ செயற்பாடுகளை பகுப்பாய்வு செய்வதற்காக சுகாதார அமைச்சினது சுகாதார பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் தரம் என்பனவற்றிக்கான மத்திய இயக்குனரகத்தினால் உத்தியோகபூர்வ விஜயம் கடந்த (07) மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எச்.எம். அஷாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் சுகாதார தர முகாமைத்துவ நிபுணர் டாக்டர் நிமல் கரந்த கொடவினால் வைத்தியசாலையின் சுகாதார பராமரிப்பு மற்றும் தரம் பாதுகாப்பு பிரிவினது வழிகாட்டலினூடாக இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களுக்காக வழங்கப்பட்ட சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியசாலை சுகாதார பணியாளர்களுக்காக வழங்கப்பட்ட நலனோம்பல் செயற்பாடுகள் தொடர்பான தரவுகள் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் ஆவணப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பாகவும் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, விடுதிகள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான தாதிய மற்றும் ஏனைய பொறுப்பு உத்தியோகத்தர்களுக்குமான தெளிவூட்டல் கருத்தரங்கு பயிற்சி செயலமர்வுகளும் நடைபெற்றதோடு முக்கிய பல பிரிவுகளுக்கும் நேரடி கள விஜயமும் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது வைத்தியசாலையின் தர முகாமைத்வவப் பிரிவினது பொறுப்பு வைத்தியர் டாக்டர் எம்.எம். தாஸிம், திட்டமிடல் பிரிவிற்கான பொறுப்பு வைத்தியர் டாக்டர் ஆகில் அகமட் சரீப்டீன், அரச மருத்துவ சங்கத்தின் வைத்தியசாலைக்கான தலைவர் டாக்டர் சியாத்.எம் இஸ்மாயில், பொது சுகாதாரப் பிரிவினது பொறுப்பு வைத்தியர் டாக்டர்.எம்.ஏ.எம். முபாரிஸ் மற்றும் தாதிய பரிபாலகர் பி.ரி. நெளபர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இவ்விஜயத்தினுடைய ஞாபகார்த்தமாக வைத்தியசாலை முன்புற பூங்கா வளாகத்தில் மா மரக்கன்றும் நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :