2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளீர் தின விழா


பாறுக் ஷிஹான்-
கிழக்கு இளைஞர் அமைப்பு மற்றும் ஜே.ஜே பவுண்டேசன் இணைந்து நடாத்திய 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளீர் தின விழா இன்று நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் கிழக்கு இளைஞர் அமைப்பின் ஸ்தாபக தலைவர் தானீஸ் றஹ்மதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

முதலில் மத அனுஸ்தானம், தேசிய கீதம் ,வரவேற்பு உரை ,தலைமை உரை ,உட்பட இடம்பெற்றதுடன் கிழக்கு இளைஞர் அமைப்பின் ஸ்தாபக தலைவர் தானீஸ் றஹ்மதுல்லாஹ் வாழ்த்து உரை வழங்கினார்.தொடர்ந்து கவிதை ஒன்றை பாண்டிருப்பு சுலக்சனா மேற்கொண்டார்.பின்னர் அமைப்பின் உயர்பீட உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் அடுத்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.பின்னர் அதிதிகளால் உறுப்பினர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வின் இடையிடையே பாடல்கள் சம்மாந்துறை முனாப் என்பவரால் பாடப்பட்டது. இறுதியாக நாட்டார் பாடலை எழுகவி ஜெலீல் நிகழ்த்த பின்னர் நன்றி உரையுடன் சிறப்பாக நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது பிரதம அதிதியாக ஜே.ஜே பவுண்டேசன் பணிப்பாளரும் கொலன்னாவ ஜும்மா பள்ளிவாசல் தலைவருமான ஐ.வை.எம் ஹனீபும் முதன்மை அதிதிகளாக கிழக்கு மாகாணத்தின் சர்வதேச மாற்றத்திற்கான பங்காளிகள் நிறுவன சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட ஆலோசகர் ரிசாட் ஸரீபும் கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் இழப்பீட்டிற்கான ஆய்வு மன்ற தலைவர் அஸ்மீ அப்துல் கபூர் மற்றும் கல்முனை வலயக்கல்வியின் உதவி பணிப்பாளர் நஸ்மியா சனூஸூம் விசேட அதிதிகளாக அல் ஹிலால் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் றிப்கா அன்சார் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பாயிஸா நவ்பல் ஆகியோர் உட்பட கல்விமான்கள் கலை இலக்கியவாதிகள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :