சாரணிய பயிற்சிப் பாசறை



எம்.எம்.ஜெஸ்மின்-
ஸ்ரீலங்கா சாரணியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணியர் சம்மேளனம் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவர்களுக்கு ஒழுங்கு செய்திருந்த சாரணிய பயிற்சிப் பாசறை அண்மையில் பாடசாலை வளாகத்தில் பாடசாலை அதிபர் யு.எல்.நஸார் தலைமையில் இடம்பெற்றது.

கொவிற் 19 தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக இப்பிரதேசத்தில் சாரணிய செயற்பாடு சற்று தளர்வான நிலையில் காணப்பட்டது. இதனை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த பயிற்சிப்பாசறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்விற்கு கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எஸ் .புவனேந்திரன் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலீக் , கல்முனை வலய உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் யு.எல்.எம்.சாஜித் , உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம்.இப்றாஹிம் , இராணுவ மேஜர் கே.எம்.தமீம் , முன்னாள் அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணிய ஆணையாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஐ.எல்.ஏ.மஜீட் , சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் , உதவி மாவட்ட ஆணையாளர்களான எம்.எச்.எம்.ஹலீம் , எம்.அப்துல் சலாம் , எம்.ஐ.எம்.இபாம் , எஸ்.தஸ்தகீர் (ALT , ATC ( Training ) , ஏ.எம்.எம்.டில்ஸாத் ( GSL) , பீ.எம்.றியாத் ( ASL ) , ரீ.முஹம்மட் இன்ஸாப் ( GML ) , சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய உதவி அதிபர்களான எம்.எச்.நுஸ்ரத் பேகம் , எஸ்.ஐ.நஸீஹா பேகம் , உடற்பயிற்சி ஆசிரியர் எம்.எஸ்.எம்.நுஸ்கி , பாடசாலை ஆசிரியர்களான யு.எல்.எஸ்.சர்ஜுனா , எஸ்.ஐ.நஸீஹா பேகம் , கே.எம்.நாஸர் , கே.எல்.ஏ.ஜவ்பர் , ரீ.எல்.எம்.இல்யாஸ் , உட்பட சாணிய மாணவர்களும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :