ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25வது பேராளர் மாநாடு



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25வது பேராளர் மாநாடு இன்று மருதமனை அல் ஹிதாயா பாடசாலை எம்.சி.பகவுதீன் கேட்போர் கூடத்தில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக ஊடகத்துறை அமைச்சர் டாஸ் அலகப்பெருமா கலந்துகொண்டார்.
பிரதம பேச்சாளராக கலாநிதி எம்.சி.ரஸ்மின் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக இந்திய லோக்சபா மன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டார்.
இதன்போது மீடியா டிரக்டி மற்றும் வருடாந்த அறிக்கை என்பன ஊடக அமைச்சரிடம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் வழங்கி வைத்தார். இதன்போது தமையுரையை என்.எம்.அமீன் நிகழ்த்தினார். பிரதம பேச்சாளராக கலந்து சிறப்பித்த கலாநிதி எம்.சி.ரஸ்மின் விசேட உரைநிகழ்த்தினார். சிறப்பதிதியாக கலந்து சிறப்பித்த இந்திய லோக்சபா மன்ற உறுப்பினர் நவாஸ் கனியும் விஷேட உரையாற்றினார்.

நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகள் பொன்னாடைபோர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றது.
இதில் பெரும் எண்ணிக்கையிலான மீடியா போரத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
போரத்தின் பொதுச்செயலாளர் சாதிக் சிஹான் நன்றியுரை நிகழ்த்தினார்.
போரத்தின் புதிய தலைவராக முதல் முதலாக இம்முறை பெண் சிரேஷ்ட ஊடகவியாலளர் புர்ஹான்பீ இஸ்திகார் தெரிவு செய்யப்பட்ட குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :