நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்று முடிந்த இலங்கையின் 74வது சுதந்திரதின நிகழ்வுகள்!



"எல்லோருக்குமான இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் 04.02.22 நேற்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

NFGGயின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் ALM.சபீல் நளீமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக்கொடியினை NFGGயின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஏற்றி வைத்தார்.

NFGGயின் காத்தான்குடி காரியாலய முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் Dr.KM.ஸாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக NFGGயின் பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், காத்தான்குடி பொலீஸ் நிலைய போக்குவரத்து பொலீஸ் பொறுப்பதிகாரி , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இணைப்பாளர் AM.மாஹிர் JP, SJB கட்சியின் பிரதேச இணைப்பாளர் சகோதரர் முஸ்தபா,மௌலவி MHM.புஹாரி பலாஹி, புத்தாக்க சாதனையாளர் சகோதரர் முனீர், NFGGயின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், தலைமைத்துவ சபை உறுப்பினர்கள்,செயற்குழு உறுப்பினர்கள்,மகளிர் பிரிவு உறுப்பினர்கள், உயர்தர மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இன்றைய நிகழ்வில் புத்தாக்க சிந்தனையாளரும் தகவல் தொழில்நுட்பத்துறையில் இளம்சாதனையாளருமான சகோதரர் முனீர் அவர்களைக் கௌரவித்து நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது. அத்துடன் உயர்கல்வியினைத்
தொடர்வதில் பொருளாதார ரீதியில் இடர்படுகின்ற 50மாணவர்களுக்கான இலவச அப்பியாசக்கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டு, NFGGயின் இவ்வருடத்திற்கான இலவச அப்பியாசக்கொப்பி விநியோக நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :