பரீட்சை மேற் பார்வையாளர் நியமனத்தில் திருகோணமலையில் சமநிலை பேணப்படுமா? -எம்.எம்.மஹ்தி கேள்வி?



ம்மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்ற க.பொ.த(உ/த) பரீட்சைக்கு மேற் பார்வையாளர்களை நியமிப்பதில் சில திட்டமிட்ட சூழ்ச்சிகள் அரங்கேற்றப் படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார். அவர் இன்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

கடந்த வருடம் நடைபெற்ற பரீட்சையில் முஸ்லிம் மாணவர்களின் பெறுபேறுகள் அதிகரித்தமை சிலரை சிந்திக்கத் தூண்டி இருக்கின்றது.

அதன் காரணமாக நகர்ப்புற பாடசாலைகளில் ஆடை விடயங்களை காரணமாகக் காட்டி முஸ்லிம் மேற்பார்வையாளர்களை நியமிக்காமல் தவிர்ப்பதற்கும் முஸ்லிம் மாணவர்கள் அதிகமாக பரீட்சை எழுதும் மண்டபங்களுக்கும் நகர் புறத்திலிருந்தே மேற்பார்வையாளர்களை நியமிப்பதற்கும் திட்டமிடப்படுகிறதா? என சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
இதன் காரணமாக முஸ்லிம் மேற்பார்வையாளர்களை பரீட்சை கடமைகளுக்கு நியமிக்காமல் அவர்களை புறக்கணிப்பதற்கும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
எனவே பரீட்சை மேற்பார்வையாளர்களை நியமிப்பதில் சமநிலைத் தன்மை பேணப்படுவதோடு வெளிப்படைத் தன்மையோடு அனைத்து தரப்பினரையும் இணைத்து மேற்பார்வையாளர்கள் நியமிக்கப் படுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :