சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய புகழாரம்



நூருல் ஹுதா உமர்-
ல்முனை சட்டத்தரணிகள் சங்க ஒன்று கூடலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடனான சந்திப்பும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் தலைமையில் அக்கரைப்பற்று தனியார் விடுதியில் நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட சிரேஸ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பரின் விருந்துபசார நிகழ்வுக்காக கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவரின் அழைப்பையேற்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை சிவில் மேல்முறையீட்டு உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராம கமலன், கல்முனை உயர்நீதிமன்ற நீதிபதி ஜே.ட்ரொட்ஸ்கி, கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ், கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன், உட்பட கல்முனை சட்டத்தரணிகள்,சங்க முன்னாள் தலைவர்கள், தற்போதைய செயலாளர் ஏ.ஜீ.பிரேம் நவாத் உட்பட கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையே நல்லுறவை பேணுவதற்கும், பரஸ்பரம் பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் தாய் சங்கத்தின் தலைவரின் வருகை காத்திரமானதாக அமைந்துள்ளதாக இங்கு உரையாற்றிய சிரேஷ்ட சட்டத்தரணிகள் கருத்துரைகள் முன் வைக்கப்பட்டன.

அத்துடன், சட்டத்தரணிகளின் நலனோம்புகை விடயங்கள் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், புதிதாக தலைமைப் பொறுப்பேற்றுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பரின் ஆளுமைகள் தொடர்பிலும் மெச்சிப் பேசினர்.

இங்கு பேசிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தனது பல்கலைக்கழக காலத்தின் தோழியான தற்போதைய கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவி ஆரிக்கா காரியப்பரின் ஆளுமைகள், திறமைகள் பற்றி சிலாகித்து பேசியதுடன், இலங்கையின் நீதித்துறையில் சட்டத்தரணிகளின் வகிபாகம் தொடர்பில் உரையாற்றினார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய தலைவரைக் கெளரவிக்கும் முகமாகவும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஆரிக்கா காரியப்பரைக்கெளரவிக்குமுகமாகவும் நினைவுச்சின்னங்கள் வழங்கி பொன்னாடையும் போர்த்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :