சாய்ந்தமருது, மருதமுனையில் புனரமைக்கப்பட்ட வீதிகள் திறப்பு



அஸ்லம் எஸ்.மெளலானா-
சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒஸ்மன் வீதிக்கு எதிர்ப்பக்கமாக அமைந்துள்ள புதிய வீதி மற்றும் மருதமுனை பிரதேசத்தில் ஸம் ஸம் வீதி 11 ஆம் குறுக்குத் தெரு என்பன கல்முனை மாநகர சபையினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
இவ்விரு வீதிகளும் வியாழக்கிழமை (31) கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் பங்குபற்றுதலுடன் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம். ஆஷிக், கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், உள்ளுராட்சி உத்தியோகத்தர் தாரிக் அலி சர்ஜூன் மற்றும் டொக்டர் எச்.எம். றசீன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

கிழக்கு மாகாண சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான PSDG திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் இவ்வீதிகள் கொங்க்ரீட் இடப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றன.

சாய்ந்தமருது ஒஸ்மன் வீதிக்கு எதிர்ப்பக்கமாக அமைந்துள்ள புதிய வீதியானது பிரதான வீதியில் இருந்து பொலிவேரியன் குளக்கட்டு வீதியை இணைக்கும் முக்கிய பாதையாக அமைந்திருக்கிறது. கடந்த காலங்களில் இவ்வீதி முழுமைப்படுத்தப்படாமல் மிக மோசமான நிலையில் காணப்பட்டதால் இப்பகுதி மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இந்நிலையில் இந்த வீதியை புனரமைப்பு செய்யுமாறு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அது போன்று நீண்ட காலமாக போக்குவரத்துக்கு பொருத்தமற்ற வகையில் மோசமான நிலையில் காணப்பட்ட மருதமுனை ஸம் ஸம் வீதி 11 ஆம் குறுக்குத் தெருவும் கொங்க்ரீட் இடப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறது.

மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்திற்கும் மசூர் மௌலானா வீட்டுத் திட்டத்திற்கும் நடுவே செல்லும் இந்த பாதையானது கிரவல் வீதியாக காணப்பட்டதுடன் இந்தப் பாதையில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் அமைக்கப்பட்டுள்ள நீர் விநியோக பரிசோதனைக் குழிகள் (Chember) வீதியின் மட்டத்தில் இருந்து உயர்வாகக் காணப்பட்டதால் அவை வாகனப் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருந்து வந்த நிலையில், பொது மக்களின் வேண்டுகோளின் பேரில் இந்த வீதியானது சேம்பரின் மட்டத்திற்கு போதியளவு உயர்த்தப்பட்டு, புனரமைப்பு செய்யப்பட்டதன் மூலம் குறித்த பிரச்சினையும் சீர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :