நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பபு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிகளிலும் அரச திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்பபுக்களினாலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வீ.தவாராஜாவின் தலைமையில் நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
பிரதேச செயலகத்தில் தேசிய கொடியேற்றி சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றதோடு, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முப்படை வீரர்களுக்காக இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பிரதேச செயலக வளாகம் சிரமதானம் செய்யப்பட்டதுடன், கலந்து கொண்டவர்களுக்கு இலைக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்; உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், நிருவாக உத்தியோகத்தர் எஸ். அப்துல் ஹமீட், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், செயல பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன் உள்ளிட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment