அனோஜனின் விடுதலைக்குப் பைசர் முஸ்தபா ஆற்றிய பணியைத் தமிழ் தரப்பினர் பாராட்ட வேண்டும்



தடுப்புக்காவல் உத்தரவு மூன்று மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என உலமா கவுன்சில் தலைவர் முபாறக் முப்தி வலியுறுத்து

பாறுக் ஷிஹான்-
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனோஜனை விடுவிப்பதற்கு முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா முன்னெடுத்த முயற்சிகளுக்குத் தமிழ் தரப்பினர் விசேட நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டங்களில் சில திருத்தங்கள் அவசியம் எனவும் உலமா கவுன்சிலின் தலைவர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அனோஜனை விடுவிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்தை விட முதலாவதாகக் களமிறங்கியவர் பைசர் முஸ்தபா அவர்களாவார். அவர் தனது சொந்தச் செலவில் இப்பயணத்தையும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அரசாங்கம் தமது கடமையைச் செய்வதற்கு முன்வந்தது. எனவே, அரசாங்கத்திற்கு அப்பால் நின்று அவர் ஆற்றிய இந்த மனிதாபிமானச் சேவை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதாகும். இவ்விடயத்தில் ஏனைய சிலர் எவ்விதப் பங்களிப்பும் இன்றி வெறும் விளம்பரங்களுக்காக மட்டுமே செயற்பட்டனர்.. பைசர் முஸ்தபாவின் இப்பணியை அங்கீகரித்து தமிழ் தரப்பினர் அவரை அழைத்து விசேட நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இது தவிர அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமானது இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இன்று நாட்டில் இனவாதம் பெரிதாகப் பெருக்கெடுத்து ஓடுவதற்குச் சமூக வலைத்தளங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாதிருப்பதே முதன்மைக் காரணமாகும். எனவே, சமூக வலைத்தளங்களை நெறிப்படுத்துவதற்கான சட்டங்கள் கட்டாயம் கொண்டுவரப்பட வேண்டும்.

அதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இருப்பினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் தொடர்பில் சில முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

குறிப்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களைத் தடுப்புக்காவல் உத்தரவின்  கீழ் பொலிஸ் கட்டுப்பாட்டில் நீண்டகாலம் வைத்திருக்காது, அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு மேல் தடுப்புக்காவல் உத்தரவு நீடிக்கப்படக்கூடாது என்ற சட்ட ஏற்பாடு உருவாக்கப்பட்டால், அது நீதித்துறையின் சுயாதீனத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க வழிவகுக்கும் என முபாறக் முப்தி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :