2022 ஆம் ஆண்டுக்கான ” Right my way “ சர்வதேச அலைச்சறுக்கு போட்டி அண்மையில் ஹிக்கடுவ கடற்கரையில் பிரதான நீர்ச்சறுக்கு மையத்தில் இடம்பெற்றது.
130 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு உள்நாட்டு விளையாட்டு வீர வீராங்கனைகள் ” அலையின் ராஜா , அலையின் ராணி பட்டங்களுக்காக போட்டியிட்டனர்.
இதில் 81 உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஆண் பங்கேற்பாளர்களுடன் , அலையின் ராஜா பட்டத்திற்காக 96 சுற்றுகளும் இடம்பெற்றன.
இவ்வாண்டு நிகழ்வில் அவுஸ்திரேலியா , ஆஸ்திரியா , பெல்ஜியம் , ஜேர்மனி , எஸ்தோனியா , பிரான்ஸ் , இங்கிலாந்து , இஸ்ரேல் , நெதர்லாந்து , ரஸ்யா , சுவீடன் , அமெரிக்கா , தென்னாபிரிக்கா உள்ளிட்ட 25 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதில் ஆடவர் பகிரங்க பிரிவில் லக்சித்த மதுஸன் ”அலையின் ராஜா ” பட்டத்தையும் , மகளிருக்கான பகிரங்க பிரிவில் நிக்கிதா ரொப் தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக ” அலையின் ராணி” பட்டத்தையும் தட்டிச் சென்றனர்.
0 comments :
Post a Comment