சாய்ந்தமருது கிறிக்கட் சம்மேளனம் தனது ஒரு வருட பூர்த்தியினை முன்னிட்டு ஒழுங்கு செய்திருந்த மருதூர் பிரிமியர் லீக் - சீசன் – 2 , 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் முதலாம் சுற்றின் இறுதிப் போட்டி நிந்தவுர் இம்ரான் விளையாட்டுக் கழகத்திற்கும் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் சாய்ந்தமருது பொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை ( 4) இடம்பெற்றது.
இலங்கை திரு நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்பட்ட நிகழ்வில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் நிந்தவுர் இம்ரான் விளையாட்டுக் கழகத்தை களத்தடுப்பிவ் ஈடுபடுமாறு பணித்திருந்தது.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் அணி 15 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது.
சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் அணி சார்பில் முஹம்மட் நிஜாத் 24 பந்து வீச்சுகளுக்கு 39 ஓட்டங்களையும் , பயாஸ் 19 பந்து வீச்சுகளுக்கு 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ரீ.கே.எம்.ஜலீல் 3 ஓவர்களில் 19 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுக்கரளயும் , அஸ்மி 3 ஓவர்களில் 12 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கட்டினையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்டிபடுத்தாடிய நிந்தவுர் இம்ரான் விளையாட்டுக் கழகம் 15 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் அணியின்முஹம்மட் நிஜாத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட கிறிக்கட் சம்மேளனத் தலைவர் இந்திக நளின் ஜெயவிக்ரம பிரதம அதிதியாகவும், றபீக் கென்ஸ்ரக்ஸன் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.றபீக் , சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழக முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற சிரேஸ்ட ஆசிரியருமான எம்.ஐ.எம்.அஸ்ஹர் , ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாரமயாளர் எம். எஸ்.எம்..மஸுட் , சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழக செயவாளர் எம்.ஏ.ஸி.ஏ.நஜீம் , சாய்ந்தமருது சிங்கர் சோ றூம் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எச்.ஜிப்ரி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment