நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பபு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிகளிலும் அரச திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்புக்களினாலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நாட்டின் 74வது சுதந்திர தின நிகழ்வு அலுவலகத்தில் இடம்பெற்றது.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றதோடு, சுதந்திர தின உறுதி மொழிகள் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில்; மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment