ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இடம் பெற்ற தேசிய தின நிகழ்வு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றது

இதன் அடிப்படையில் மட்டக்களப்பபு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிகளிலும் அரச திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்பபுக்களினாலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.

ஓட்டமாவடி தேசிய கல்லூரியில் அதன் முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.

தேசிய கல்லூரியின் ஆசிரியர் நலன்புரி சங்கம் மற்றும் மாணவர் நலன்புரி சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தேசிய கொடியேற்றி சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றதோடு, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முப்படை வீரர்களுக்காக இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பாடசாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந் நிகழ்வில்; ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவாராஜா, சிரேஸ்ட சட்டத்தரணிகளான எச்.எம்.எம்.றாசிக், ஹபீப் ரிபான், கல்லூரியின் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது சிரேஸ்ட சட்டத்தரணி ஹபீப் ரிபானின் நிதியளிப்பில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :