சம்மாந்துறையில் சமூர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும்நிகழ்வு!



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
மூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சமூர்த்தி சமூகப்பாதுகாப்பு நிதியத்தின் மூலம்மாணவர்களுக்கான சமூர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு சம்மாந்துறைபிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர் யூ.எல். எம். சலீம் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (11) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனிபா பிரதம அதிதியாக கலந்து கொண்டுகொடுப்பனவு சான்றுபத்திரங்களையும், காசோலையினையும் வழங்கிவைத்தார்.
சமூர்த்தி அபிவிருத்தி வங்கி ஊடாக சமூர்த்தி உதவி பெரும் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ளகல்விப்பொதுத்தராதர சாதரண தரம் சித்தியடைந்து (2020/2022கல்வியாண்டில் )உயர்தரக் கல்வியைதொடர்கின்றமாணவர்களின் கல்வி ஊகக்குவிப்புக்காக குறித்த சமூர்த்தி சிப்தொர புலமைப்பரிசில்வழங்கப்படுகின்றது.
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 51 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இருந்து 266 மாணவர்கள் இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறுவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் உளவளத்துறை ஆலோசகர் மனூஸ் அபூபக்கர் மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யூ. எம். அஸ்லம், தேசிய சேமிப்பு வங்கியின்முகாமையாளர் கே.சுரேஸ்,சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர் எஸ்.எம் அன்சார்,வலய முகாமையாளர்கள் மற்றும் மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :