இம்மாதம் 15 ஆம் 16 ஆம் திகதிகளில் மட்டக்களப்பில்; சதுரங்க சம்மேளனத்தின் தேசிய சம்பியன்சிப் முதலாம் கட்டத் தெரிவு



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை சதுரங்க சம்மேளனத்தின் தேசிய சம்பியன்சிப் (National championship 2022 ) போட்டிகளின் முதலாம் கட்டத் தெரிவுப் போட்டியான Novice Division போட்டிகள் இம்மாதம் 15 ஆம் 16 ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் புனித மிக்கேல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகள் திறந்த போட்டியாகும். (வயதுப் பிரிவுகள் அற்றது).ஆண், பெண் பிரிவுகள் தனியாக நடைபெறும்.

இப்போட்டியில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் . அம்பாறை மாவட்ட போட்டியாளர்களுக்கு நிந்தவுர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இப்போட்டிகளில் தெரிவுசெய்யப்படும் வீரர்கள் அடுத்த கட்டப்போட்டிகளான சிரேஸ்ட பிரிவுப்போட்களில் பங்குபற்றலாம். Majors Division போட்டிகளானது Iசர்வதேச தரத்திலான போட்டிகளாகும்.

போட்டியில் பங்கேற்க விருப்பும் மட்டக்களப்ப, திருகோணமலை மாவட்ட வீரர்கள் 0758815533 (A.shouthri) னெ்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :