தேசிய மட்ட போட்டிகளுக்கு இறக்காமம் பிரதேச செயலக இளைஞர்கள் தெரிவு !



நூருல் ஹுதா உமர்-

2021 ஆம் ஆண்டுக்கான 33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை விளையாட்டு போட்டிகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று இப்போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்கள் அடுத்துவரும் தினங்களில் தேசிய ரீதியான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.

33வது தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாரை மாவட்ட தடகளப் போட்டி நிகழ்ச்சிகள் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போது இறக்காமம் பிரதேச செயலகம் சார்பாக வீ.சி.மிலான் இளைஞர் கழகம் சார்பக கலந்துகொண்ட எம்.எச். சதாம் அஹமட் (800M) மற்றும் ஏ.எம். ஆசிப் (1500M) ஆகிய வீரர்கள் முதலாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 33வது இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய ரீதியான போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சுற்றுத் தொடரில் பங்குபற்றி வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும், பயிற்றுவித்த இளைஞர் சேவை அதிகாரி ஏ.ஆர். றியாஸ், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யூ.எல். றஷீன் ஆகியோருக்கு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றி வெற்றிச் சாதனைபெற நல்லாசிகளையும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :