மட்டுப்படுத்தப்பட்ட சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொன்விழாவை முன்னிட்டு பொன்விழா ஆரம்ப நிகழ்வுகளும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம். உதுமாலெப்பையின் தலைமையில் கூட்டுறவு சங்க முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான முஹம்மட் அஸ்மி ஆதம்லெப்பை கலந்துகொண்டார். மேலும் கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி தங்கவேல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.யூ. மலிஹாவும் விசேட அதிதிகளாக சணச அபிவிருத்தி வங்கியின் சம்மாந்துறை கிளை முகாமையாளர், இலங்கை வங்கியின் சாய்ந்தமருது கிளை முகாமையாளர், சாய்ந்தமருது இக்ரா நிறுவன பணிப்பாளர் யூ. சத்தார், ஹகட்ட தேயிலை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல். நாஸர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதேச பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்ட இந்நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்ட சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்க பணிப்பாளர் சபையினர், உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், கூட்டுறவு திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment