மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட இடைக்கால போக நெல் வேளாண்மைச்செய்கை பாரிய வெற்றி



றாவூர் நிருபர் நாஸர்-மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நாற்பது வருடகாலத்தின் பின்னர் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட இடைக்கால போக நெல் வேளாண்மைச்செய்கை பாரிய வெற்றியளித்துள்ளது.

மட்டக்களப்பு - வந்தாறுமூலை- பெருவெளிக்கண்டம் பிரதேசத்தில் 55 விவசாயிகள் சுமார் 170 ஏக்கர் வயல் நிலத்தில் இம்முறை இடைக்காலபோக நெல் வேளாணமைச்செய்கையில் ஈடுபட்டனர்.

தற்போதைய அறுவடையில் இவர்களுக்கு சிறப்பான விளைச்சல் கிடைத்துள்ளதனால் இந்த விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பெரும்போகம் மற்றும் சிறுபோகம் ஆகிய பயிர்ச்செய்கை காலத்திற்கிடைப்பட்ட காலத்தில் 'ஏத்தாழை" என்று பாரம்பரிய சொல்கொண்டு அழைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இடைக்கால நெற்பயிர்ச்செய்கை நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த சுமார் நாற்பது ஆண்டுகாலமாக கைவிடப்பட்டிருந்தது.

இவ்வாண்டில் மீண்டும் செய்கைபண்ணுவதற்கு விவசாயிகள் மேற்கொண்ட முயற்சிக்கு நீர்ப்பாசனத்திணைக்களம் உரிய நேரத்திற்கு நீரைவழங்கி ஒத்துழைப்பு வழங்கியதையடுத்து அறுவடையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளுக்கு விவசாயிகள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :