இந்துக்கள் அனுஸ்ட்டிக்கும் சிவ விரதங்களுள் ஒன்றான திருவெம்பாவை விரதம், நாளை(11)சனிக்கிழமை அதிகாலை ஆரம்பமாகின்றது. இவ்விரதத்தினை ஆருத்திரா தரிசனம் என்றும் அழைப்பர்.
நாளை தொடக்கம் 10தினங்கள் இவ்விரதம் அனுஸ்டிக்கப்படும். ஆலயங்களில் அதிகாலை திருவெம்பாவை சிறப்பு பூஜைகள் இடம்பெறும்.இவ்விரதம் எதிர்வரும் 20ஆம் திகதி திருவாதிரை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.
அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சி பாடி அனைவரையும் துயிலெழுப்பி சிவபிரானுக்கு திருவெம்பாவை பாடுவது வழமை. அதேபோன்று இந்துக்கள் வாழும் கிராமங்களில் பொதுவாக அதிகாலை திருப்பள்ளியெழுச்சி ஊர்வலம் நடைபெறுவதும் வழமையாகும்.மேலும் சில ஆலயங்களில் திருவாசக முற்றோதல் இடம்பெறுவது வழக்கமாகும்.
0 comments :
Post a Comment