கிழக்கு பிரதமசெயலாளரான பண்டாரநாயக்கவிற்கு பிரியாவிடை!
வி.ரி.சகாதேவராஜா-கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான அலுவலகம், அம்பாறை நகரில் திறந்துவைக்கப்பட்டது. அம்பாறை அரசாங்க அதிபராகவிருந்து கிழக்கு மாகாண பிரதமசெயலாளராக பதவியுயர்வுபெற்ற டி.எம்.எல்.பண்டாரநாயக்க ,சமய தலைவர்கள், பாதுகாப்புப்படை உயரதிகாரிகள் உள்ளிட்ட பல பிரதானிகளும் கலந்துகொண்டனர்.
ஆளுநரின் அம்பாறை மாவட்ட வாசஸ்தலத்திற்கு சமீபமாக ஆளுநரின் இவ் அலுவலகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
ஆளுநருடன் சம்பந்தப்பட்ட அம்பாறை மாவட்ட சகல அலுவல்களும் இனிமேல் இங்கு மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டது.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில், சம்மாந்துறை பிரதேசசபை உதவிதவிசாளர் எ.அச்சிமொஹமட் உள்ளிட்ட ஒருசிலஅரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.காரைதீவு பிரதேசசஅபிவிருத்தி தொடர்பான மகஜரொன்றை தவிசாளர் ஜெயசிறில் ஆளுநரிடம் கையளித்தார்.
இதேவேளை, அம்பாறை அரசாங்க அதிபராகவிருந்து கிழக்கு மாகாண பிரதமசெயலாளராக பதவியுயர்வுபெற்ற டி.எம்.எல்.பண்டாரநாயக்கவிற்கு மாவட்டசெயலகத்தில் பிரியாவிடைவைபவம் எளிமையாக நடைபெற்றது.
மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.மாவட்டசெயலக அலுவலர்களும் கலந்துகொண்ட இவ்வைபவத்தில் பிரதமசெயலாளர் சகலருக்கும் நன்றிதெரிவித்து விடைபெற்றார்.
இன்னும் அம்பாறை மாவட்டத்திற்கென நிரந்தர அரசாங்கஅதிபர் ஒருவரும்நியமிக்கப்படவில்லை.நியமிக்கபப்டும்வரை பதில் அரசாங்கஅதிபராக மேலதிகஅரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் செயற்படுகிறார்.
0 comments :
Post a Comment