நோர்வூட் பிரதேசசபைக்குற்பட்ட வனராஜா வட்டாப்பகுதி பாடசாலைகளுக்கு தொற்று நீக்கி வழங்கி வைத்து பேசிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
அட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட டிக்கோயா ஸ்ரீவாணி தமிழ் வித்தியாலத்தில் 09/12/2021 இடம்பெற்ற இந் நிகழ்வில் வனராஜா மேல் பிரிவு, வனராஜா கீழ் பிரிவு, தரவலை மேல் பிரிவு, தரவலை கீழ் பிரிவு மற்றும் பன்மூர் வித்தியாலயங்களுக்கு தொற்று நீக்கி வழங்கப்பட்டது
அதிபர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் தொடர்ந்து பேசியதாவது....
வடகிழக்கு மாகாணங்களில் ஆயுதபோராட்டம் செய்தும், வீதிமறியல் போராட்டம் செய்தும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியாதிருந்த உரிமைசார் விடங்கள் மற்றும் பிரதேசசபை , பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு என்பனவற்றை தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த நல்லாட்சியில் நுவரெலியா மாவட்டத்திற்கு தனது அரசியல் சாணக்கியத்தினால் பெற்றுக்கொடுத்தது அவ்வாறு பெற்றுக்கொடுக்கப்பட்டு உறுவாக்கப்பட்ட பிரதேசசபைகளில் பெருந்தோட்ட பகுதிகளுக்கு சேவை செய்யும் வகையில் பிரதேசசபை சட்டதிருத்தமும் நல்லாட்சி காலத்திலே தமிழ் முற்போக்கு கூட்டணியினால் கொண்டு வரப்பட்டது அத்தோடு 2020 ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்படவிருந்த பிரதேசசெயலகங்கள் அரசியல் காழ்புணர்ச்சியால் நிறுத்தப்பட்டது.
இப்போது அந்த பிரதேச செயலகங்கள் உப செயலகங்களாக அமைக்க இப்போதை அரசு நடவடிக்கை எடுத்துவருவதானது எமது சமூகத்திற்கு நாம் செய்து வரும் தூரோகத்தனமாகும்
எதற்காக பிரதேசசபைகள் அதிகரிப்பு,பிரதேசசெயலகம் அதிகரிப்பு ,பிரதேசசசபை சட்டத்திருதங்கள் கொண்டுவரப்பட்டதோ அந்த தேவைப்பாடுகளை இனம் கண்டு குறித்த நிறுவனங்களினூடாக சேவைகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
அமைச்சிகளினூடா மாகாண ,ஆளுனரினூடாக ஒதுக்கப்படும் நிதிகளில் அபிவிருத்திகளை முன்னெடுப்பது மட்டும் பிரதேசசபையின் சேவை அல்ல பிரதேசசபைகளினூடாக முன்னெடுக்கப்பட வேண்டி பல விடயங்கள் உள்ளது .
அவை முன்னெடுக்கப்படுவதாக இல்லை குறிப்பாக, பிரதேசசபையினூடாக தோட்டப்பகுதிகளுக்கு சேவை செய்யக்கூடிய அதிகாரம் இருந்தும் கூட நான்காண்டுகள் நிறைவடையும் இந்த காலம் வரை தோட்டப்பகுதிகளிலுள்ள கழிகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கொவிட் தொற்றினால் நீண்ட காலம் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீள திறக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் எனது சொந்த முயற்சியில் பிரதேச பாடசாலைகள் மற்றும் சிறுவர் முன்பள்ளிகளுக்கு தொற்று நீக்கி வழங்கி வருகிறேன் ஆகவே பாசாலைகளுக்கு வரும் மாணவர்களுக்கு கல்வியோடு சுகாதாரத்தையும் உறுதிபடுத்த வேண்டும் எனவும் பாடசாலைகளுக்கான எனது உதவிகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment