திருக்கோவில் கல்வி வலய கல்விசாரா ஊழியர்கள் தங்களின் பிரச்சினைகளை சங்கத்தின் பிரதமசெயலாளரிடம் முறையிடல்



எம். ஜே. எம். சஜீத்-
லங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்கல்வி வலய பிரிவின் கீழ் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்துஅதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் முகமாக சங்கத்தின் பிரதித்தலைவர் ஏ. எம். ஜெமில் தலைமையில் நேற்று (28) விநாயபுரம் திரு/ கோரைக்களப்பு திரு / சக்தி வித்தியாலய மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதன் போது கல்விசாரா ஊழியர்கள் எதிர் நோக்கும் பதவியுயர்வு மற்றும் மேலதிக கொடுப்பணவு, கிழக்குமாகாணத்தின் புதிய ஆட்சேர்ப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் போன்ற பல பிரச்சினைகள்சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் சங்கத்தின் பிரதம செயலாளர் ஏ.கே. டபிள்யூ. விஜேயசேகர, அம்பாரை மாவட்ட செயலாளர்எம்.ஜே.எம். சஜீத், சங்கத்தின் இணைப்புச் செயலாளர் எம்.ஏ.எம். அப்துல்லாஹ், திருக்கோவில் கல்வி வலயஇணைப்பாளர் ஏ.நபதீபன் உட்பட கல்வி சாரா ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :